தமிழ்நாடு

ஆசிய அளவில் சாதனை படைத்த டிடிவி தினகரனின் அமமுக!

Published

on

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொடி 123 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இது ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளது.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் சென்ற பின்னர் சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக ஒதுக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுகவை மீட்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்களுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் டிடிவி தினகரன், அரசியல் காரணங்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

சசிகலாவை பொதுச்செயலாளராகவும், டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராகவும் கொண்ட இந்த அமமுகவின் கொடியானது அதிமுக கொடியின் நடுவே ஜெயலலிதாவின் உருவத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் நேற்று அமமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 123 அடி உயரக் கொடிக்கம்பத்தில், 20 அடி நீளமும், 30 அடி உயரமும்கொண்ட கொடியை ஏற்றினார். இதுதான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பம் ஆகும். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கும் முக்கிய சக்தியாக அமமுக விளங்கும் என தெரிவித்தார்.

Trending

Exit mobile version