தமிழ்நாடு

அமமுகவுடன் கூட்டணி வைத்த ஒவைசி கட்சி: திமுகவுக்கு பாதிப்பு வருமா?

Published

on

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒவைசி கட்சி திடீரென தமிழகத்தில் தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவைசி கட்சிக்கு ஏகப்பட்ட முஸ்லிம் ஓட்டுகள் இருப்பதால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற ஐயத்தையும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி வைத்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒவைசி அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா முன்னேற்ற கழகத்திற்கு, அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அம்மா முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இந்திஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒவைசி கட்சியால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

Trending

Exit mobile version