தமிழ்நாடு

அமமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிறது: இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

Published

on

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது

இதனை அடுத்து தேமுதிக தனித்துப் போட்டியிடப் போவதாகவும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தேமுதிக தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கூட்டணிகள் அழைப்பு விடுத்தன

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியை தேமுதிக ஏற்றுக் கொண்டதாகவும் இருதரப்பினரும் நேற்றுமுதல் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இந்த கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 50 தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version