தமிழ்நாடு

அமமுகவுடன் கூட்டணி: தேமுதிகவுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதா?

Published

on

அம்முக கூட்டணியில் தேமுதிகவுக்கு 70 தொகுதிகளில் வரை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து அம்முக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. கிட்டதட்ட 200 தொகுதிகளுக்கு மேல் அம்முக கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது தேமுதிக நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தேமுதிகவுக்கு அம்முக கூட்டணியில் 70 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக திமுக கூட்டணி இல்லாமல் கடந்த முறை மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக போட்டியிட்டது என்பதும் அதே போல் இம்முறையும் அதிமுக திமுக கூட்டணி இல்லாமல் போட்டியிடப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version