தமிழ்நாடு

அம்மா சிம்மெண்ட் விலை திடீர் உயர்வு.. வீடு கட்டுபவர்கள் அதிர்ச்சி!

Published

on

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்ரேஷன் சார்பில் மானிய விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலை திடீரென உயர்ந்துள்ளது.

வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை அதிகம் என்பதால், வீடு கட்ட திட்டமிடும் ஏழைகள் பயனடையும் வகையில் தமிழநாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் அம்மா சிமெண்ட்.

இந்த திட்டத்தின் கீழ் சரிவர சிமெண்ட் கிடைப்பதில்லை என்று கூறப்பட்டு வந்தாலும், தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளது.

இந்நிலையில் திடீரென அம்மா சிமெண்ட் விலை 26 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே 190 ரூபாயாக விற்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை 216 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போது தான் முதல் முறையாக சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சிமெண்ட் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவைதான் இந்த விலை உயர்வுக்கு காரணங்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விலை உயர்ந்தாலும் அது புதிதாக சிமெண்ட் வேண்டும் என்று பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் என்றும், முன்பே பதிவு செய்து இருந்தவர்களுக்கு பழைய விலையிலேயே சிமெண்ட் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 காலத்தில் வருமான குறைந்துள்ள சூழலில், அம்மா சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது வீடு கட்ட திட்டமிட்டவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version