இந்தியா

பொதுமக்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, மாபெரும் பேரணியை நடத்தும் அமித்ஷா!

Published

on

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய அளவில் பரவி வரும் காரணத்தால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து உள்ளது என்பதும் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சிக்கலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் மத்திய பாஜக அரசு மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்று மூன்று மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முக்கிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில் மேற்கு வங்கத்தில் மூன்று இடங்களில் தேர்தல் பிரச்சாரப் பேரணிகளை இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா நடத்துகிறார். பொது மக்களுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு, அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பாடு இல்லையா என சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

மேலும் இந்த பேரணிக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்தும் மாபெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவி வரும் நிலையில் தேர்தல் அரசியல் செய்யாமல் பொதுமக்கள் காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version