இந்தியா

அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக்கழகம்: அமித்ஷாவின் தேர்தல் வாக்குறுதி

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதியாக அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. பிரதமர் மோடி அடிக்கடி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அயோத்தியில் பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 77 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதாகவும் இது பாஜகவின் சாதனை என்றும் கூறினார்.

மேலும் அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அயோத்தியில் விமான நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது என்றும் மேலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது பிரிவு இனி வரவே வராது என்றும் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையையும் அனுமதிக்கவே முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version