சினிமா செய்திகள்

இவரு யாருன்னு கண்டு புடிங்க பார்க்கலாம்!

Published

on

பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் தான் இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்று சொன்னால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள். அந்த அளவுக்கு அவரது தோற்றம் வித்தியாசமாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறும் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுஜித் சர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள குலாபோ சிட்டாபோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி தான் இது. இதில், அமிதாப் பச்சன் மிகவும் வயதான இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடித்துள்ளார்.

நீல நிற குர்த்தாவில் தலையில் துண்டு போட்டு இருக்கும் அமிதாப் பச்சனின் இந்த லுக்கை பார்த்தால், ஏதோ பாவப்பட்ட ஒரு முதியவர் போலவே இருக்கிறது.

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் அவரது கதாபாத்திரம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க ரசிகர்கள், திரைத்துறையினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version