சினிமா செய்திகள்

அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

Published

on

உயரத்திலும் திறமையிலும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான பிக் பி அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது படம் குறித்த பகிர்வுகளையும், தனது கருத்துக்களையும் ட்விட்டரில் தினமும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், அமிதாப் பச்சனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரது புகைப்படத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை விஷமக்காரர்கள் வைத்துள்ளனர்.

இந்த ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு பாகிஸ்தான் சேர்ந்த ஹேக்கர்ஸ்கள் தான் காரணம் என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version