சினிமா செய்திகள்

வேட்டி சட்டையில் அசத்தும் உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன்!

Published

on

எஸ்.ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் உயர்ந்த மனிதன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை எஸ்.ஜே. சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநரும், கள்வனின் காதலி படத்தின் இயக்குநருமான தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, அதனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுக்கு டேக் செய்துள்ளார்.

பாலிவுட் பிதாமகர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படமாக உயர்ந்த மனிதன் உருவாகி வருகிறது. இதற்கு முன்னர், பல படங்களில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி முயற்சித்து பலன் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் வேட்டி, சட்டை அணிந்து மிடுக்காக அமிதாப் பச்சன் காட்சியளிக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version