தமிழ்நாடு

சென்னை வரும் அமித்ஷா; ரஜினியை சந்தித்து ‘அரசியல் அழுத்தம்’ கொடுப்பாரா?

Published

on

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.

‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக அமித்ஷா, கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தொடரும்’ என்றனர். அதற்கு அமித்ஷா, எதுவும் பதில் அளிக்காமலேயே சிறப்புரையை ஆற்றி முடித்தார். தொடர்ந்து அப்போது பாஜகவின் மாநில நிர்வாகிகளை சந்தித்து, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில் மீண்டும் சென்னைக்கு வரும் அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசி முடிப்பார் என்று தெரிகிறது. மேலும், உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தையும் அவர் நேரில் சென்று சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது. ரஜினி, அரசியல் கட்சித் தொடங்கப் போவதில்லை என்பதை உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், வரும் தேர்தலில் அவரது ஆதரவை அமித்ஷா, சந்திப்பின் போது கோருவார் என்று தெரிகிறது.

 

 

Trending

Exit mobile version