சினிமா

‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற ஆமிர்கான்!

Published

on

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான் பெற்றுள்ளார்.

பசில் ஜோசப், தக்‌ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலையாளத்தில் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் வெளியானது. குடும்ப வன்முறையை பேசும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஆறு கோடியில் உருவாகி, வெற்றியடைந்தது 50 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்தது.

மேலும் ஓடிடியில் இந்த படம் வெளியான போதும், மொழிகள் கடந்து பலதரப்பு ரசிகர்கள் இடையேயும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான் பெற்றுள்ளார். மலையாளத்தில் இயக்கிய விபின் தாஸே இந்தியிலும் இயக்க உள்ளார்.

மலையாளத்தில் தர்ஷனா ராஜேந்திரன் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தார். இந்தியில் இவரது கதாபாத்திரத்தில் ஃபாத்திமா சனா ஷேக் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் வெளிதான ‘தங்கல்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending

Exit mobile version