தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் தமிழகம்… களைகட்டும் விற்பனை

Published

on

கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் விழாவை கோலாகல கொண்டாத்துடன் வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். தேவாலயங்கள் எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் பொருட்டு ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படவுள்ளது.

இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கொரோனா காரணமாக பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்யும் வகையில் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மக்கள் அவர்களது வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனாவால் முடக்கி கிடந்த மக்களுக்கு இவ்விழா குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் குடில் அமைப்பதற்கான பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு வகைகள், கிஃப்ட்கள் என மக்கள் தங்களது ஷாப்பிங்கை தொடங்கி விட்டனர். கடைகளில் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

Trending

Exit mobile version