உலகம்

பொருளாதார தடை விதிக்கப்படும்: ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை!

Published

on

உக்ரைனை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய நாட்டின் எல்லையில் படைகளை குவித்து வருகிறது என்பதும் இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்திருக்கும் ரஷ்யாவை அவ்வப்போது அமெரிக்கா எச்சரிக்கை வரும் நிலையில் தற்போது இறுதி கட்டமாக இன்னும் ஒரு அடி ரஷ்யாவின் படை உக்ரைனை நோக்கி முன்னேறினால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டியிருக்கும் என்றும் அது மட்டுமின்றி சர்வதேச அளவில் அந்நாட்டிற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையையும் மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version