வைரல் செய்திகள்

கஞ்சா அடிக்க மாதம் ரூ.2.15 லட்சம் சம்பளம்; ஆனால்?

Published

on

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் அமெரிக்கன் மரிஜூவானா. இந்த நிறுவனம் கஞ்சா மருத்துவம் மற்றி ஆனலைனில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த இதழில் வெளியாகும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்காகத் தினமும் கஞ்சா புகைத்து அதன் அனுபவங்களை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்கான ஆட்களை பணிக்கு எடுப்பதற்கான அமெரிக்கன் மரிஜூவானா வெளியிட்டுள்ளது.

அதில், இந்த பணிக்குச் சேர விரும்புபவர்கள் தினமும் விதவிதமான ரக கஞ்சாக்களைப் புகைத்து விமர்சிக்க வேண்டும். ஆண்டுக்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

ஆனால், இந்த பணிக்குச் சேர விரும்புவோர்களின் நாட்டில் கஞ்சா சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கஞ்சா ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருளாகவே உள்ளது. எனவே இந்தியாவில் இருந்துகொண்டு இந்த பணியில் சேர முடியாது. வெளிநாட்டில் குடிபெயர்ந்து வேண்டுமானால் இந்தியர்களால் இந்த பணிக்கு முயற்சி செய்யலாம்.

தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி 3000 பேருக்கும் அதிகமானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version