இந்தியா

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது ஏன்? டிரம்பின் பேச்சுக்கு இந்தியா மறுப்பு!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப்பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜி20 மாநாட்டில் நானும் இந்திய பிரதமர் மோடியும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது, மோடி என்னிடம், நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன் என்று பேசியினார் டிரம்ப். டிரம்பின் இந்த பேச்சு இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார். அதில், பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எந்த வேண்டுகோளும் வைக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.

எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்தியா மறுத்துள்ளது. இந்நிலையில் இதற்கு டிரம்ப் என்ன பதில் அளிப்பார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version