சினிமா செய்திகள்

பிரியங்கா பெயர் டேமேஜ் ஆனதுக்கு அபிஷேக் தான் காரணம்: கமலிடம் கூறிய போட்டியாளர்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆக அபிஷேக் தான் காரணம் என கமல்ஹாசனிடம் அமீர் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய பிரியங்கா ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில நாட்கள் வேற லெவல் காமெடி செய்து பார்வையாளர்களை அசத்தினர் என்பதும் குறிப்பாக பிக்பாஸையே கலாய்த்தது ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அபிஷேக்கிடம் அவர் நெருங்கி பழக பழக அவரது கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தாமரை, அக்சரா, நிரூப் உள்பட பலரிடம் பிரியங்கா சண்டை போட்டதற்கு அபிஷேக் ஏத்தி விட்டது தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அபிஷேக் இல்லாத ஒருசில வாரங்களில் பிரியங்காவின் கேரக்டர் மாறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆனது அபிஷேக் தான் காரணம் என்றும் அபிஷேக் ஏத்திவிட்டதால் தான் பிரியங்கா தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் என்றும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த அமீர் கமல்ஹாசனிடம் இன்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து ’நான் ஒரு வலிமையான போட்டியாளர் சார், என்னை யாரும் டேமேஜ் பண்ண முடியாது என்று பிரியங்கா கூற அதற்கு கமல்ஹாசன் நீங்கள் ஒரு வலிமையான போட்டியாளரா? இல்லையா? என்பதை ஆடியன்ஸ் தான் கூற வேண்டும் என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது பிரியங்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மொத்தத்தில் இன்று பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவருக்கும் நேரம் சரியில்லாத நாள் என்பது இன்றைய புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

Trending

Exit mobile version