சினிமா

தனுஷின் புதிய படத்தில் அமீர்…விரைவில் துவங்கும் படப்பிடிப்பு….

Published

on

பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் அமீர். ஆனால், அதன்பின் மீண்டும் இயக்கத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. ஜெயம் ரவியை வைத்து ‘ஆதி பகவான்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அப்படத்திற்கு பின் அவர் திரைப்படம் எதுவும் இயக்கவில்லை.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் தொடர்பான காட்சிகள் விரைவில் எடுக்கப்படவுள்ளது. அமீர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் அமீருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் அடுத்து இயக்கும் வாடிவாசல் படத்திலும் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version