தமிழ்நாடு

பிரச்சாரத்துக்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்; வழிவிட்ட திமுக தொண்டர்கள்- ‘இதான் திமுக’ என நெகிழ்ந்த ஸ்டாலின்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. மக்கள் கூட்டம் அதிகமிருந்ததால் ஆம்புலன்ஸ் கூட்டத்தைத் தாண்டிச் செல்வது கடினமாகத் தெரிந்தது. அப்போது அவர் ஆம்புலன்ஸுக்கு மக்கள் விழிவிடும்படி சொல்ல, அதற்கு தொண்டர்களும் டக்கென்று நகர ஆம்புலன்ஸ் கூட்டத்தைக் கடந்து சென்றது. இந்த சம்பவம் பார்ப்பை நெகிழ வைத்துள்ளது.

கன்னியாகுமரியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின், நேற்று அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தான் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. சாலையில் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்ததால், எப்படியும் கூட்டத்தைக் கடந்து தான் சென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதைப் பார்த்த ஸ்டாலின், தன் பிரச்சார உரையை நிறுத்தி, ‘ஆம்புலன்ஸுக்கு வழி விட்டுடுங்க. வண்டி போகட்டும் அப்புறம் கூட்டத்த பாத்துக்கலாம்’ என்றார். உடனே ராணுவக் கட்டுப்பாடுடன் திமுக தொண்டர்கள் அனைவரும் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டனர். அப்போது ஸ்டாலின், ‘தலைவர் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை இது. அதற்கு வழி விட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. இது தான் திமுக’ என நெகிழ்ந்தார்.

seithichurul

Trending

Exit mobile version