தமிழ்நாடு

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: தேம்பி தேம்பி அழுத அன்புமணி; ஆனா பிஹண்ட் தி சீன்ஸ் இப்படியா இருந்துச்சு?

Published

on

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. 

வன்னியர்களுக்கு தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிற கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. தமிழக ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் இது குறித்து தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் வகையிலான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கொடுத்ததைத் தொடர்ந்து அதிமுகவுடனான தங்கள் கூட்டணியை உறுதி செய்தது பாமக. இதன் மூலம், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது. 

இந்த உள் இட ஒதுக்கீடு குறித்தான மசோதா நிறைவேற்றப்பட்ட உடன், பாமகாவின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவின் ‘பிஹைண்ட் தி சீன்ஸ்’ காணொலி என்று இன்னொரு எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

seithichurul

Trending

Exit mobile version