வணிகம்

அட்டகாசம்.. 36 லட்சம் நபர்களை பணக்காரர்கள் ஆக்கப்போகும் அம்பானி.. எப்படி?

Published

on

ஆசியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரான முகேஷ் அம்பானி, ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தைச் செப்டம்பர் மாதம் பங்குச்சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதற்கான அனுமதியையும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் இருந்து ஏற்கனவே பெற்றுள்ளது. அதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் வரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் விரைவில் தனி பெரும் நிறுவனமாகப் பங்குச்சந்தையில் வெளியிடப்பட உள்ளது என கூறப்படுகிறது.

ரிலையன்ஸின் இந்த முடிவினால் அதில் முதலீடு செய்துள்ள 36 லட்சம் பங்குதாரர்கள் மிகப் பெரிய பயனை அடைவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய வங்கி அல்லா நிதி நிறுவனமாகவும் ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் உருவாகும் பஜாஜ் ஃபினான்ஸ், பேடிஎம் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிறுவனமாக இந்த நிறுவனம் வரும்.

சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனம் ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸின் பங்கு விலை 189 ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு தரகு நிறுவனங்கள் 179 ரூபய் அல்லது 157 முதல் 190 ரூபாய்க்குள் பங்கின் விலை இருக்கும் என தெரிவித்துள்ளன.

ரிலையன்ஸ் ஸ்டார்டிஜிக் இன்வஸ்ட்மெண்ட்ஸ் பெயரை ஜியோ ஃபினாசியல் சர்வீசஸ் லிமிடட் என பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள ரிலையன்ஸின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் வைத்துள்ளவர்களுக்கு ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் பங்குகளும் வழங்கப்படும். இப்படி பங்குகள் வழங்கும் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.

வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் ஃபினான்ஸ்ச் நிறுவனத்தின் நிகர மதிப்பு 44,000 கோடி ரூபாயாக உள்ளது. ஜியோ ஃபினான்சிய நிறுவனம் வெளியில் வரும் போது அதன் நிகர மதிப்பு 40,000 கோடி ரூபாயாக உள்ளது.

இதனை வைத்துப் பார்க்கும் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்துள்ளவர்களுக்கு அதற்கு இணையாக ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் இலவசமாகக் கிடைக்கும். இது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

சில வருடங்களாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கீழ் உள்ள ஜியோ டெலிகாம் நிறுவனம் பிரித்து பங்குச்சந்தையில் தனியாக வெளியிடப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் பிரித்து வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதிகளின் படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கீழ் குறிப்பிட்ட அளவில் தான் துணை நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் கீழ் 10-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. எனவே அவற்றில் சிலவற்றைப் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version