இந்தியா

அமேசான் வீட்டுக்கு அனுப்பும் ஊழியர்களில் இந்தியர்கள் மட்டும் இத்தனை பேர்களா? அதிர்ச்சி தகவல்

Published

on

உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சமீபத்தில் செலவினத்தை குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் வரை சரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அதில் இந்தியர்கள் மட்டும் எத்தனை பேர் என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் மைக்ரோசாஃப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அமேசான் நிறுவனம் தற்போது 18 ஆயிரம் பேரை நீக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இதில் இந்தியாவில் உள்ள அமேசான் அலுவலகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்தி கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் அதில் ஒரு சதவீத ஊழியர்கள் அதாவது ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவத் 2023 ஆம் ஆண்டிற்கான எங்களின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த வேலைநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளத். வணிகங்களின் நீண்ட கால ஆரோக்கியம். நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஊழியர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு மதிப்பாய்வு மிகவும் கடினமாக உள்ளது. எனவே தான் வேலைநீக்க நடவடிக்கை என்ற கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version