வணிகம்

இந்த வாரம் தொடங்கி 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

Published

on

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்த வாரம் தொடங்கி 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவன வரலாற்றில் இதுவே மிகப் பேரிய பணிநீக்க அறிவிப்பு என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமேசான் இந்த பணிநீக்க அறிவிப்பால் 1 சதவீதத்திற்கான ஊழியர்கள் தான் வெளியேற்றப்படுவார்கள்.

Jeff Bezos' wealth drops by $9 bn to $145 bn in a single day

உலகம் முழுவதும் அமேசானில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த ஊழியர்கள் பணிநீக்கம் பெரும்பாலும் அமேசானின் சாதனங்கள் பிரிவு, குரல் உதவி அலெக்சா, சில்லரை வணிகம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருக்கும்.

சென்ற வாரம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் அறிவித்ததை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் அறிவித்துள்ளது பிற நிறுவனங்கள் ஊழியர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version