உலகம்

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

Published

on

உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஏற்கனவே வேலை மிக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் 9 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வேலை நீக்க நடவடிக்கை வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. இன்று காலை அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜெஸ்ஸி வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் ’அமேசான் நிறுவனத்தின் வேலை நீக்க நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் AWS கிளவுட் யூனிட், Twitch கேமிங் பிரிவு, விளம்பரம் மற்றும் PXT அனுபவம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் பிரிவில் உள்ளவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஊழியர் குறைப்பு குறித்த ஆலோசனையை மேற்கொள்ளவில்லை என்றும் ஆனால் தற்போது நிறுவனத்தை ஆய்வு செய்த போது சில மதிப்பீடுகளை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனவே வேலை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனத்தில் ஏற்கனவே உலக அளவில் 18000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஊழியர்களுக்கு ஒரு கடினமான ஆண்டாக மாறி வருகிறது. ஏற்கனவே பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தின் செலவுகளை குறைக்க 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறிய மறுநாளே அமேசான் நிறுவனம் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த இரு நிறுவனமும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் ஊழியர்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version