இந்தியா

பாஸ்போர்ட்டும் எடுத்து தருகிறதா அமேசான்? ஆச்சரியமான தகவல்!

Published

on

பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பாஸ்போர்ட்டையே அனுப்பி அமேசான் ஆச்சரியப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மிதுன் என்பவர் தனது பாஸ்போர்ட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள பாஸ்போர்ட் கவர் ஒன்றை அக்டோபர் 30-ஆம் தேதி ஆர்டர் செய்தார். அவருக்கு வந்த பாஸ்போர்ட் கவரில் ஒரு பாஸ்போர்ட்டும் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் இதுகுறித்து கஸ்டமர் கேர் அலுவலர்களும் பேசியபோது தவறுக்கு வருந்துகிறோம் என்று மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனக்கு வந்த பாஸ்போர்ட் யாருடையது அதை என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்த போது அந்த பாஸ்போர்ட்டுக்கு உரியவரை அவரே தேடிக்கண்டு பிடித்தார்.

அந்த பாஸ்போர்ட் திருச்சூர் மாவட்டம் முகமது சலீம் என்பவர் உடையது என்பது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் பாஸ்போர்ட் ஒப்படைத்தார். முகமது சலீம் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் கவர் செய்து இருக்கிறார். ஆனால் அந்தக் அவர் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் பாஸ்போர்ட்டை மறதியாக அதில் வைத்து ரிட்டன் அனுப்பிவிட்டார்.

இதனை அடுத்து மிதுன் பாஸ்போட் கவர் செய்ய, அந்த பாஸ்போர்ட்டுடன் கூடிய பாஸ்போர்ட் கவரை மிதுனுக்கு அனுப்பியுள்ளனர் அமேசான் ஊழியர்கள். இதன் காரணமாகத்தான் மிதுனுக்கு பாஸ்போர்ட்டுடன் பாஸ்போர்ட் கவர் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version