உலகம்

600 பொருட்களுக்கு தடை விதித்தது அமேசான்: பரபரப்பு தகவல்!

Published

on

உலகின் நம்பர் ஒன் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனம் 600 பொருட்களை நிரந்தரமாக தனது இணையதளத்தில் நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 600 பொருட்களும் சீனாவை சேர்ந்தது என்பதால் சீனாவுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள முக்கிய தயாரிப்புகள் அனைத்தும் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் கிடைக்கும் என்பதும், கோடிக்கணக்கானோர் தினமும் இந்த தளத்தில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சீனாவில் தயாரான 600 பொருட்களை நிரந்தரமாக நீக்கியுள்ளது சீனாவிற்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

அமேசானின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் இந்த 600 சீன நிறுவனங்களின் பொருட்களை அமேசான் தடைவிதித்து உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சில பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு முறையற்ற முறையில் விளம்பரம் செய்வதாகவும், ஏமாற்றும் வகையில் சில சலுகைகளையும் வழங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அமேசான் நிறுவனம் கண்டுபிடித்துள்ளதால் அந்த பொருட்களுக்கு தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது தளத்தில் விற்பனையாகும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வாங்க வேண்டும் என்றும், ஆனால் சீன பொருள்களின் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இது தங்கள் நிறுவனத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சீனாவின் 600 பொருட்களை தங்கள் தளத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் அமேசான் தரப்பிலிருந்து தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் ஒரு பொருளை வாடிக்கையாளர் ஒருவர் வாக்கும்போது அந்த பொருட்களை ஏற்கனவே வாங்கியவரின் கருத்துக்கள் கீழே தரப்பட்டிருக்கும். அந்த கருத்துக்களை நம்பி தான் பலர் அந்த பொருட்களை வாங்குவார்கள். ஆனால் சீனாவில் தயாராகும்போது தயாராகும் பல பொருட்களின் கருத்துக்களை அந்நிறுவனத்தினர்களே போலியாக பதிவு செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய தளத்தில் நேர்மையான நிறுவனங்களுக்கு மட்டுமே இடம் உண்டு என்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிறுவனத்திற்கு எந்த காரணத்தை முன்னிட்டும் இடம் கிடையாது என்றும் அமேசான் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக சீனாவின் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version