சினிமா செய்திகள்

’நாங்க வாங்கிய படத்தை தியேட்டருக்கு எல்லாம் தர முடியாது’- அமேசான் திட்டவட்டம்

Published

on

அமேசான் ப்ரைம் தளம் விலை கொடுத்து வாங்கிய திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் திரைப்படமான கூலி நெ.1 படத்தை அமேசான் ப்ரைம் தளம் ஆன்லைன் வெளியீட்டுக்காக வாங்கியுள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதால் தயாரிப்பு தரப்பினருக்கு நல்ல லாபம் கிடைத்ததாகவே கூறப்படுகிறது. இதனிடையே திரை அரங்கங்கள் திறக்கப்பட்டதால் தியேட்டர் வெளியீட்டுக்காகவும் படத்தை வாங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஆன்லைன் வெளியீட்டுக்காக அமேசான் ப்ரைம் வாங்கிய கூலி நெ.1 திரைப்படத்தை திரை அரங்கங்களில் வெளியிடவே கூடாது என அமேசான் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாம். அமேசானின் இந்த தீர்க்கமான முடிவால் தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட யாருக்கும் மகிழ்ச்சி தரவில்லையாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version