உலகம்

புதிய பிரெளசரை உருவாக்குகிறதா அமேசான்? கூகுள் குரோம்-க்கு போட்டியா?

Published

on

உலகின் நம்பர் ஒன் பிரவுசராக கூகுள் குரோம் இருந்து வரும் நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு புதிய பிரவுசரை நிறுவ கருத்துக்கணிப்பு எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பெரும்பாலான இன்டர்நெட் பயனளிகள் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அது மட்டும் இன்றி மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் ஆகிய பிரவுசர்கள் மிக பெரிய அளவில் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரியும் பல பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு பிரவுசரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து பயனர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டுவிட்டர் பயனாளி ஒருவர் அமேசான் நிறுவனம் மெயில் மூலம் புதிய பிரவுசர் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அமேசான் நிறுவனம் புதிய பிரவுசரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து பயனர்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் குரோமில் இல்லாத தனித்தன்மை, மற்றும் புதிய வசதிகள் உடன் கூடிய பிரவுசரை உருவாக்க வேண்டும் என்பதுதான் அமேசான் நிறுவனத்தின் திட்டம் என்றும் இந்த பிரவுசர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் தனது இகாமர்ஸ் சந்தை மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கிறது என்பதும் அதேபோல் அமேசான் பிரைம் உலகின் பல பயனர்களால் பயன்படுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் அமேசான் நிறுவனம் புதிய பிரவுசரை உருவாக்கினால் அந்த பிரவுசருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் அமைக்க இருக்கும் புதிய பிரவுசர் கூகுள் குரோம் பிரவுசரை விட பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

seithichurul

Trending

Exit mobile version