இந்தியா

200 பெண் தொழிலதிபர்களுக்கு கை கொடுக்கும் அமேசான்.. இனி ஆன்லைனில் ஆடைகள், அழகு பொருட்கள்..!

Published

on

200 பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

அமேசான் நிறுவனம் பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது தயாரிப்புகளை தங்களது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக உலகளாவிய இன்குபேட்டர் வுமன்னோவேட்டர் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளான கிட்ஸி வின்சி, விசாலா நேச்சுரல்ஸ், ஜெம்ஸ் & ஜூவல்ஸ் மற்றும் புன்கோ ஜங்கோ ஆகியவைகளை அமேசான் நிறுவனத்தில் இனி அதிகம் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆடைகள், அழகு பொருட்கள், நகைகள், சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், சுகாதார மற்றும் பல்வேறு துறைகளில் தயாராகும் பெண் தொழிலதிபர்களின் பிராண்டுகள், அமேசான் மற்றும் அதன் இணைய வழி ஏற்றுமதி தளமான அமேசான் குளோபல் செல்லிங் ஆகிவற்றில் இணைக்கப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பிராண்டுகளுக்கான திறன் மேம்பாடு, தயாரிப்புகளை பட்டியலிடுதல், விலை நிர்ணயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலும் பெண் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் இந்தியாவின் குளோபல் டிரேடு இயக்குனர் பூபென் வக்கன்கர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது ’அமேசான் நிறுவனம் இந்திய தொழில் முனைவோருக்கான ஏற்றுமதி வாய்ப்பை தற்போது திறந்து வருகிறது என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இ காமர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமேசான் இந்தியாவில் அனைத்து வகையான வணிகங்களையும் ஏற்றுமதி செய்வது மிகவும் எளிது என்பதால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் சிறு தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை அமேசான் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய நாங்கள் உதவி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறிது தொழில்கள் இந்தியாவில் வலுவாக இருப்பதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் என்றும் மொத்த ஏற்றுமதி விற்பனை 5 பில்லியனை தாண்டி உள்ளது என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 20 பில்லியன் டாலர்களாக உயர்த்த அமேசான் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் தொழிலாளர்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version