இந்தியா

ரூ.96,000 ஏசியை ரூ.5900க்கு விற்பனை செய்கிறதா அமேசான்?

Published

on

96 ஆயிரம் மதிப்புள்ள ஏசியை ரூ.5.900 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர்-1 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அவ்வப்போது எதிர்பாராத வகையில் தள்ளுபடி விலையில் விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் என்பது தெரிந்தது.

அந்த வகையில் சமீபத்தில் அமேசான் இணையதளத்தில் ரூ. 96,700 மதிப்புள்ள டோஷிமா என்ற ஸ்பிலிட் ஏசி சிஸ்டத்தை ரூ.5900 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்தது. இந்த தகவலை பார்த்த பலர் அந்த ஏசியை வாங்குவதற்காக புக் செய்தனர்.

இந்த நிலையில் திடீரென அமேசான் தனது தவறை உணர்ந்து உள்ளது. ரூ.96,700 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஏசியை ரூ. 5900 தள்ளுபடி செய்து 90,800 ரூபாய் என குறிப்பிடுவதற்கு பதிலாக ரூ.5900 என தவறுதலாக குறிப்பிட்டு விட்டது. இதனை அடுத்து அந்த தவறை அமேசான் நிறுவனம் சரி செய்தது.

அதே நேரத்தில் ரூ.5900 ரூபாய்க்கு ஏசி கொடுப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்து இருந்தபோது புக் செய்தவர்களுக்கு அதே விலையில் கிடைக்குமா அல்லது மீதி பணத்தை அமேசான் நிறுவனம் பெறுமா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.

அமேசான் நிறுவனம் இவ்வாறு விலையை தவறுதலாக பதிவு செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே லட்சக்கணக்கில் விற்க வேண்டிய கேமராவை வெறும் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தவறாக அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version