உலகம்

மேனேஜர்கள் உள்பட 20,000 பேர்களின் வேலை காலி.. அமேசான் எடுத்த அதிரடி நடவடிக்கை

Published

on

அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் பேர்களின் வேலை பறி போக இருப்பதாகவும் இவர்களில் மேனேஜர்கள் அடங்குவார்கள் என்றும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் உலக அளவில் இது ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amazon, jeff Bezos

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமேசான் அலுவலகங்களில் வேலை நீக்கம் செய்யப்பட இருக்கும் ஊழியர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது. வேலை நீக்கம் செய்யப்படும் 20 ஆயிரம் ஊழியர்கள் பல மேனேஜர்களும் உண்டு என்றும் கூறப்படுகிறது.

பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் செலவைக் குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது அமேசான் நிறுவனமும் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version