உலகம்

அமேசான் தலைவரின் முன்னாள் மனைவி செய்த காரியத்த பாருங்க!

Published

on

அமேசான் நிறுவனத் தலைவரின் முன்னாள் மனைவி மெகன்சி ஸ்காட், 4 மாதங்களில் 4 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் உலகளவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் ஜெப் பேசா. இவருக்கும் மெக்கன்சி ஸ்காட் என்பவருக்கும் திருமணமாகி விவகாரத்தும் ஆகி விட்டது. அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில்,  தாராள மனம் படைத்த மெக்கன்சி ஸ்காட், தனது வந்த சொத்துகளை சில தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்துள்ளார். இவ்வாறு 4 மாதங்களில் மெக்கன்சி வாரி வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா? 4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.29 ஆயிரத்து 437 கோடி ஆகும். இந்த 4 பில்லியன் அமெரிக்க டாலரை, 384 தொண்டு நிறுவனங்களுக்கு சராமாரியாக வாரி வழங்கியுள்ளார்.

தனக்கு போகத் தான் தானமும் தர்மமும் என்பார்கள். ஆனால், இவரோ மற்றவர்களுக்கு போல தான் தனக்கு என்றிருப்பார் போல.

author avatar
seithichurul

Trending

Exit mobile version