உலகம்

அமேசான் நிறுவனர் உடன் சேர்ந்து விண்வெளி செல்லும் 18வயது இளைஞர்!

Published

on

அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் விண்வெளிக்குச் செல்கிறார் உலகின் இளம் விண்வெளி பயணம் மேற்கொள்பவரான 18 வயது ஆலிவ் டேமன்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பீசோஸ் சமீபத்தில் தான் தனது சிஇஓ பதவியை விட்டு விலகி தனக்குப் பிடித்த இதர விஷயங்களை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். ப்ளூ ஆரிஜின் என்னும் ராக்கெட் அனுப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். ஜெஃப் பீசோஸ் தனது நிறுவனம் மூலம் தானும் தனது சகோதரரும் இணைந்து விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

மேலும், அவருடன் விண்வெளிக்குப் பயணிக்கு ஒரு டிக்கெட்டும் ஏலத்துக்கு விடப்பட்டது. மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையும் விண்வெளிப் பிரியருமான 18 வயது இளைஞரான ஆலிவ் டேமன் 28 மில்லியன் டாலர் தொகைக்கு இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். விரைவில் ஜெஃப் பீசோஸ், அவரது சகோதரர் மார்க் பீசோஸ் மற்றும் 18 வயது ஆலிவ் டேமன் ஆகியோர் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளனர்.

இவர்களுடன் 82 வயது விமானி ஒருவரும் பயணிக்க உள்ளார். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக வயதான நபரும் மிகவும் இளைய நபரும் ஒரு விண்கலத்தில் பயணிக்க உள்ளனர்.

Trending

Exit mobile version