வணிகம்

ரிலையன்ஸில் முதலீடு செய்ய விரும்பும் அமேசான்!

Published

on

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் பேஸ்புக் போன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் பிரிவில் 9.9 சதவீத பங்குகளை வாங்கும் என்றும், இந்த முதலீடானது ஜியோ மார்ட் வணிகத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடெயில் ஜியோ மார்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் இதில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அமேசான் தங்களது முதலீடை செய்தால், முகேஷ் அம்பானி உலகின் 4-ம் மிகப் பெரிய கோடீஸ்வரை என்ற பெயரை பெறுவார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 5-ம் இடத்திற்கு பின்தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version