தமிழ்நாடு

1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: அமேசான் அதிரடி அறிவிப்ப்பு!

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் செய்து வரும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை தர இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் கூட ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்ற நிலையில் தற்போது அமேசான் என்ற தனியார் நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை தினங்கள் அடுத்தடுத்து வர உள்ளதை அடுத்து அந்த பண்டிகை காலத்தில் அமேசான் நிறுவனத்திற்கு பொதுமக்களிடம் இருந்து ஆர்டர்கள் குவியும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பண்டிகை காலத்தில் அதிக அளவு விற்பனை நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி ஆக சேவை வழங்கும் வகையில் இந்த புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே நாடு முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் பண்டிகை சீசன் கால வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த சீசன் முடிந்தவுடன் பெரும்பாலானோர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இன்னும் ஆறு மாத காலத்திற்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் பலரும் இந்த வேலைவாய்ப்புகளை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version