இந்தியா

சென்னையில் தயாராகிறது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்: வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு!

Published

on

தொலைக்காட்சியுடன் செல்போன் மற்றும் இன்டர்நெட்டை இணைக்கும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை இந்தியாவில் அதிலும் சென்னையில் தயாரிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணை தலைவரும் இந்தியாவிற்கான தலைவருமான அமித் அகர்வால் என்பவர் இந்தியாவில் நடைபெற்ற மின்னணு சாதனங்களின் உற்பத்தி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது தொலைக்காட்சியுடன் இன்டர்நெட் மற்றும் செல்போனை இணைக்கும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

முதல் கட்டமாக சென்னையில் இந்த தயாரிப்பை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்து இந்த ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை தயாரிக்க இருப்பதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதன் உற்பத்தியை துவங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் காரணமாக சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கூறியிருப்பதாவது: சென்னையில் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவி உற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் அமேசானின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதன்மூலம் உள்நாட்டு தயாரிப்புகளின் திறன் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். நமது தற்சார்பு இந்தியா கனவிற்கு இதன்மூலம் டிஜிட்டல் வாயிலாக அதிகாரமளிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version