தொழில்நுட்பம்

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பீசோஸ்… காரணம் என்ன?

Published

on

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கராஜில் அமேசான் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜெஃப் பீசோஸ். இன்று உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக ஜெஃப் பீசோஸ் உள்ளார். அமேசான் தளம் இன்று சர்வதேச அளவில் வளர்ந்து நிற்கும் மாபெரும் டெக் நிறுவனம் ஆகும்.

தொடர்ந்து தன்னுடைய ஆர்வத்தை விரிவுபடுத்தவும், பிடித்தவற்றில் ஈடுபட்டு செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தினாலும் சிஇஓ பதவியை விட்டு விலகுவதாக ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெஃப் பீசோஸ் கூறுகையில், “சிஇஓ பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. இந்த பொறுப்பை சுமந்து கொண்டு என்னால் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்குப் பிடித்த விஷயங்களில் என்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. அதிக நேரம் இதற்கே செலவாகி விடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெஃப் பீசோஸ் வகித்து வந்த சிஇஓ பதவியை தற்போது அமேசான் க்ளவுட் கம்ப்யூட்டிங் பிசினஸ் பிரிவுத் தலைவர் ஆக இருக்கும் ஆண்டி ஜேசி அந்த சிஇஓ பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version