உலகம்

64 ஆயிரம் கோடிக்கு ஹாலிவுட் ஸ்டுடியோவை வாங்கும் அமேசான்: ஊழியர்கள் நிலை என்ன?

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றை 64 ஆயிரம் கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று அமேசான் என்பதும் இதன் தலைவர் ஜெப் பிஜாஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

அமேசான் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது என்பதும் அவை ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோவான எம்ஜிஎம் ஸ்டூடியோவை அமேசான் நிறுவனம் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஎம் ஸ்டூடியோவில் பணிபுரியும் ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை என்றும் அமேசான் உறுதி அளித்துள்ளது. இதனால் அதன் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Trending

Exit mobile version