இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கு எப்போது செல்லலாம்? முன்பதிவு ஆரம்பம்

Published

on

ஒவ்வொரு இந்து பக்தர்களும் அமர்நாத் யாத்திரைக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் வங்கிகள் மூலம் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அமர்நாத் யாத்திரை செல்லலாம் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமர்நாத் செல்வதற்கான முன்பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய நிலையில் 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் அதிக அளவிலான முன்பதிவு இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version