சினிமா செய்திகள்

மலையாள படத்தில் தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அமலாபால்!

Published

on

நாயகிக்கான முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேடி நடிக்கத் துவங்கி உள்ளார் நடிகை அமலாபால், மீடூ விவகாரத்திற்கு பிறகு, எந்தவொரு பெரிய நடிகருடனும் அமலாபால் ஜோடி சேரவில்லை.

அதோ அந்த பறவை போல, ஆடை என இரு படங்களும் இவர் நடிப்பில் விரைவில் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன.

இந்நிலையில், மலையாளத்தில் தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியாக அமலாபால் நடிக்க உள்ளார். முன்னதாக தலைவா படத்தில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக நடித்து அதற்கு பல மீம்ஸ்களும் பறந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அனுஷ் பிள்ளை என்னும் அறிமுக இயக்குநர் இயக்கும் கேடவர் என்ற மலையாள படத்தில் சர்ஜன் பத்ரா எனும் கேரக்டரில் அமலாபால் நடிக்க உள்ளதாகவும், அதன் படப்பிடிப்புகள் வரும் மார்ச் 15 முதல் துவங்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version