சினிமா செய்திகள்

அமலா பாலின் ஆடை டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

Published

on

நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் நாளை ரிலீசாகிறது.

மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் நாளை ஜூன் 18ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் கிழிந்த ஆடையுடன் உடலின் பல பாகங்கள் தெரியும் படி போல்டாக நடித்திருந்தார்.

ஆடை

இந்த போஸ்டர் வைரல் ஆனது மட்டுமின்றி இந்த போஸ்டருக்கு எதிராக சர்ச்சைகளும் கிளம்பின. சிலர் ஹாலிவுட் படமான I Spit On Your Grave படத்தின் காப்பியாக இருக்கிறது என்ற கமெண்டும் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என புதிய போஸ்டருடன் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், அதில், மறைக்க ஒன்றும் இல்லை என்ற அர்த்தம் அடங்கிய வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இதனால், இந்த டீசருக்கு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version