சினிமா செய்திகள்

விமர்சனம்: அப்ளாஸ் அள்ளும் அமலாபாலின் ஆடை!

Published

on

ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என படம் குறித்து வெளியான எல்லா தகவல்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை படம் வெளியாவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

மாலை அல்லது இரவு காட்சிகள் தான் நேற்று சில தியேட்டர்களில் வெளியான இன்று தமிழகமெங்கும் அமலா பாலின் ஆடை படம் தடைகளை தாண்டி திரையிடப்பட்டுள்ளது.

அமலாபாலின் நிர்வாண நடிப்பு படத்திற்கு எந்தளவுக்கு பலத்தை கொடுத்துள்ளத்து என்பதை பார்ப்போம்.

மேயாத மான் படத்தை இயக்கி பலரது உள்ளங்களை கவர்ந்த ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் உருவாகி உள்ளது.

படத்தின் துவக்கத்திலையே திரைச்சீலை சட்டம் குறித்த கதையுடன் படத்திற்கு தேவையான பெண்களுக்கு மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டிய நிலை இருந்ததை குறிப்பிட்டு ஆடையின் முக்கியத்துவத்தோடு படம் துவங்குகிறது.

காமினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால் தொப்பி எனும் பிராங்க் ஷோவை நடத்தி வருகிறார். எதிலும் சவால் எப்போதும் சவால் என விளையாட்டுத் தனமாக வாழ்ந்து வரும் அமலா பால், ஆடை இல்லாமல் ஒரு நாள் அலுவலகத்தில் தனியாக இருக்கிறேன் என்ற சவாலை ஏற்பதால், அவருக்கு நடக்கும் விளைவுகளும் அதில் இருந்து எப்படி தப்பினார் என்பதையும் ஆபாசம் இன்றி சுவாரஸ்யத்துடன் கொடுத்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

அமலா பாலின் இந்த போல்டான நடிப்புக்கு நிச்சயம் பல விருதுகள் கதவை தட்டும். டீசரில் வரும் அந்த ஒரு ஷாட் மட்டும் ஆடை இல்லாமல் அமலா பால் நடிக்கவில்லை. படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அமலா பால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணா மற்றும் படத்தொகுப்பாளர் ஷபிக் முகமது அலியின் பங்களிப்பு படத்திற்கு எவ்வளவு பெரிய துணையாக உள்ளது என்பதை படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.

சமூகத்தில் பெண் உடல் மீது வைத்துள்ள ஒருவித மன சிந்தனையை உடைக்கவும் அதுவும் ஒரு உடல் தான் என்பதை உணர்த்த ரத்னகுமார் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மூவி ரேட்டிங்: 3.5/5.

seithichurul

Trending

Exit mobile version