சினிமா செய்திகள்
பிகினி உடையில் மலையேறி சாகசத்தில் ஈடுபட்ட அமலாபால்!
சர்ச்சைக்குப் பேர் போனவர் அமலா பால். இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஆடை திரைப்படம் வெளியான பிறகு அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இயக்குநர் விஜய் உடனான திருமணம் விவாகரத்துக்குப் பிறகு, சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் மலையேறி சாகசத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் சிலவற்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எந்த ஒரு பயமும் இன்றி நீச்சல் உடையில் இவர் மலையேறும் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், அவரின் முயற்சியைப் பாராட்டி கமெண்ட்கள் செய்துவருகின்றனர்.
அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே அமலாபால் தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.