சினிமா

சுனைனாவுக்கு அம்மாவான அமலா!

Published

on

­நிலா நிலா ஓடி வா வெப் சீரியல் வெற்றியடைந்ததை தொடர்ந்து சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் சுனைனாவின் அம்மாவாக நடிக்க நடிகை அமலா ஒப்பந்தமாகியுள்ளார்.

டி. ராஜேந்திரரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா, பின்னர், ரஜினி, கமல், மோகன் என பல நட்சத்திரங்களுடன் நடித்தார். பின்னர், நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல், 2014ஆம் ஆண்டு மனம் ஆகிய தெலுங்கு படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

அதன் பின்னர், தற்போது 4 ஆண்டுகள் கழித்து சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். நிலா நிலா ஓடி வா என்ற காட்டேரி வெப் தொடர் சுனைனாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில், பெண் இயக்குநர் புஷ்பா இயக்கும் ஹை பிரிஸ்டஸ் எனும் புதிய வெப் தொடரில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version