சினிமா செய்திகள்

உன்னை விட நான் ஒண்ணும் மோசமா நடிக்கலை – கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த நடிகை லதா!

Published

on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17வது ஓவர் வரை டெஸ்ட் மேட்ச் ஆடுவதை போல ஆடி வெற்றி பெற்றது.

இதனை விமர்சித்த நடிகை கஸ்தூரி, “என்னய்யா பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியார் கூட லதாவ இப்படி தடவி இருக்க மாட்டாரே” என கிண்டல் ட்வீட் போட்டார்.

ஆனால், அந்த ட்வீட், சற்று நேரத்துக்கெல்லாம் வைரல் ஆகி விடவே, நடிகை லதா கஸ்தூரிக்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

உன்னை விட நான் ஒன்றும் மோசமாக நடிக்கவில்லை என்றும், பெரியவர்கள் குறித்து எப்படி பேச வேண்டும் என்கிற மரியாதையை முதலில் கற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

பின்னர், தான் உள்நோக்கத்துடன் அந்த பதிவை இடவில்லை என கஸ்தூரி மன்னிப்புக் கோரினார்.

Trending

Exit mobile version