தமிழ்நாடு

கதிர் ஆனந்துக்கு சிக்கல்? வேட்பாளரை மாற்ற திமுக தீவிரம்!

Published

on

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு தீவிரமாக உள்ளது.

கடந்த முறை வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் கதிர் ஆனந்த் வீட்டில் கைப்பற்றப்பட்ட 10.5 கோடி ரூபாய் பணம். இதனை தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து வழக்கும் பதிவு செய்தது கதிர் ஆனந்த் மீது. இந்நிலையில் மீண்டும் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்த் மீது அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதனை காரணம் காட்டி அவரது மனுவை ரத்து செய்ய வைக்க அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள ஏ.சி.சண்முகம் முயற்சித்து வருவதாக திமுக தரப்பில் பேசப்படுகிறது.

இந்நிலையில் அப்படி ஒருவேளை கதிர் ஆனந்தின் மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான ஒரு மாற்று வேட்பாளரை போட துரைமுருகன் தரப்புக்கு ஸ்டாலின் அறிவுற்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கதிர் ஆனந்த் தனது மாற்று வேட்பாளராக தனது மனைவி சங்கீதாவை அறிவித்துள்ளார்.

கடந்தமுறை தனது கணவருக்காக சங்கீதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாவட்ட எல்லையோரம் உள்ள மக்களின் மொழிகளில் அதிரடியாக பிரச்சாரம் செய்துள்ளார் இவர். இதனால் இவரது பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. எனவே சங்கீதாவே கதிர் ஆனந்துக்கு வலுவான மாற்று வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.

ஒருவேளை கதிர் ஆனந்த் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா திமுக சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடுவார்.

seithichurul

Trending

Exit mobile version