தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: 100 நாள் வேலைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ஆகியது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் கிராமப்புற மக்களின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

#image_title

தமிழகத்தில் 2023 – 2024 நிதியாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி அறிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த ஆண்டு இதுவரை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்காக 10,914 கோடி செலவில் சுமார் 31 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது வரும் நிதியாண்டில் 35 கோடி வேலை நாட்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Trending

Exit mobile version