உலகம்

குட்டி விமானத்தை மென்னு முழுங்கிய முதலை – சுந்தர் பிச்சை பகிர்ந்த வீடியோ

Published

on

ஊறும் இனங்களில் மிகவும் ஆபத்தானது முதலை. இது நீரிலும் வாழும். நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் இதன் வாயில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். சிறுத்தை, அருமை ,மான் போன்ற விலங்குகளை கூட அசால்ட்டாக வாயில் கவ்வி தண்ணீரில் இழுத்து சென்றுவிடும்.

இந்நிலையில், ட்ரோன் என அழைக்கப்படும் ரிமோட் மூலம் இயங்கும் ஒரு குட்டி விமானத்தை ஒரு முதலை கடித்து மென்னு முழுங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள ஏரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முதலையை அருகில் சென்று படம் பிடிப்பதற்காக அந்த ட்ரோன் அனுப்பப்பட்டது. முதலைக்கு மேலே அது பறந்த போது, லபக்கென்று வாயில் அதை கவ்விய முதலை அதை இரை என நினைத்து கடித்து மென்றது. இதனால், அந்த விமானத்தில் இருந்து புகை கிளம்பியது. இது அனைத்தையும் அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர தற்போது அது வைரலாகி விட்டது. ஆச்சர்யம் என்னவெனில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=gus5FMGtEok

Trending

Exit mobile version