தமிழ்நாடு

அதிமுக-விஜய் கூட்டணி தேர்தல் நேரத்தில் முடிவு: எடப்பாடி கே. பழனிசாமி

Published

on

சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நடிகர் விஜயின் புதிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுகவுக்கும் விஜய்யின் புதிய கட்சிக்கும் இடையே கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்தது.

இந்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் தேர்தல் நேரத்தில் நிலைமைக்கு ஏற்ப ஒரு முடிவு எடுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Tamilarasu

Trending

Exit mobile version