இந்தியா

இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்படும்: மத்திய அமைச்சர்

Published

on

இன்னும் ஒரு ஆண்டில் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகள் இருக்கும் காரணத்தினால் அந்த சுங்கச்சாவடிகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது, போக்குவரத்து நெரிசல்கள், தாமதம், ஆகியவை ஏற்படுகின்றன.

மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதோடு நேரமும் விரயமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக சமீபத்தில் ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலம் பல வாகனங்கள் தற்போது சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் எடுக்காமல் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அனைத்தும் இன்னும் ஒரு ஆண்டில் அகற்றப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து ஜிபிஎஸ் தொழில்நுட்பம் விரைவில் வாங்கப்படும் என்றும் அந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையை கடக்கும் வாகனங்களின் உரிமையாளர்களின் வங்கி கட்டணத்திலிருந்து சுங்க கட்டணம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாடு முழுதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version